Tamil Artiste

தமிழ் நாடகக் கலையால்  சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை உலகறியச் செய்தவரும் சபரிமலை சன்னிதானத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை வழங்கியவரில் ஒருவருமான நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் பெருமைகள் மற்றும் சாதனைகளின் தொகுப்பு.

நாடகத்தின் மேடைகளை நல்லதொரு கோயிலாக்கி ஏடகத்தில் அடங்காத நவரசத்தால் எண்ணிலா புராண நாடகங்கள் நடத்திக் காட்டி நூதனமாம் புது மேடை இலக்கணத்தில் நுண்ணறிவால் பல நுட்பங்கள் சேர்த்த கலைக்கோமான் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை தன் நாடக வாயிலாக-உலகறிய செய்த திரிகால ஞானி காலத்தால் வெல்ல முடியாத சாதனை நாயகனாம் நாடகச் சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் குன்றாத புகழ் என்றென்றும் வாழ்க! வாழ்க!