Tamil Artiste

மதுரை தேவி பால வினோத சங்கீத சபா

NAWAB T.S. RAJAMANICKAM PILLAI

THE FATHER OF MYTHOLOGICAL DRAMA

நாடகத்தின் மேடைகளை நல்லதொரு- கோயிலாக்கி

ஏடகத்தில் அடங்காத  நவரசத்தால்

எண்ணிலா ஆன்மீக நாடகங்கள் நடத்தி காட்டி

நூதனமாம் புது மேடை இலக்கணத்தில்

 நுண்ணறிவால் பல நுட்பங்கள் சேர்த்த கலைகோமான்

சபரிமலை ஸ்ரீஅய்யப்பனை தன் நாடக வாயிலாக

                                                       -உலகறியச்  செய்த திரிகால ஞானி

காலத்தால் வெல்லமுடியாத சாதனை கலைஞன்

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கத்தின்

நிலையான புகழ் என்றும் வாழ்க! வாழ்க! 

வாழ்ந்த காலம்

29.10.1906    –   19.10.1974

பெற்றோர்

சுப்ரமணியப்பிள்ளை, குப்பம்மாள்.

பிறந்த ஊர்

தஞ்சாவூர்

மனைவி

அங்கையற்கன்னி அம்மாள்

நாடக சபை

மதுரை தேவிபால வினோத சங்கீத சபா ஸ்தாபிதம் –   1933

விருதுகள் :

 1. நவாப் பட்டம் வழங்கியது – மைசூர் மகாராஜா ஜெய சாம்ராஜ்.
 2. 1964 ல் இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்கம்.
 3.  நாடக கலாநிதி (பாரதி மணிமண்டப நிதிக்காக) கல்லிடைக்குறிச்சியில் நாடகம் நடத்தி அதன் வசூல் வழங்கியதற்கு “அமரர் கல்கி” வழங்கியது.
 4.  நாடக கேசரி (சென்னையில் மூதறிஞர் ராஜாஜி வழங்கியது).
 5.  சுதந்திர நாடகமணி (இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15- 1947 அன்று தூத்துக்குடி மக்களால் வழங்கப்பட்டது).
 6.  நாடக கலைக் காவலன் (பம்பாய் தமிழ் சங்கத்தால் பம்பாய் கவர்னர் ஹரேகிருஷ்ண மேதாப் முன்னிலையில் வழங்கப்பட்டது.

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் சாதனை நாடகங்களின் புள்ளி விபரப் பட்டியல்.

(தமிழ்நாடு, கேரளம், பம்பாய், மைசூர், டெல்லியில் நடந்த காட்சிகள்)

 • ஸ்ரீ கிருஷ்ணலீலா                 – 1418 காட்சிகள்
 • சம்பூர்ண ராமாயணம்        – 830  காட்சிகள்
 •  ஏசுநாதர்                                     – 1102 காட்சிகள்
 •  பக்த ராமதாஸ்                      –    613 காட்சிகள்
 •  தசாவதாரம்                            – 1300 காட்சிகள்
 •  ஸ்ரீ ஐயப்பன்                              – 1341 காட்சிகள்
 •  சக்தி லீலா                                – 338  காட்சிகள்
 • இன்பசாகரன்                            – 732  காட்சிகள்
 •  குமார விஜயம்                        – 732 காட்சிகள்
 •  நந்தனார்                                     – 350 காட்சிகள்

மற்றும்

 • பக்த துருவன்
 • பக்த பிரகலாதா
 • ஞான சௌந்தரி
 •  ராஜ பக்தி
 • பிரேமகுமாரி
 • ராஜாம்பாள்
 • சதி அனுசுயா
 • பிரபல சந்திரா
 • மனோகரா
 • பவளக்கொடி

சிறப்புகள் மற்றும் சாதனைகள் :

 1. இந்தியாவில் சுமார் 275 பேர் கொண்ட மிகப்பெரிய முதல்தர நாடக கம்பெனி.
 2. 35 ஆண்டுகள் (1933-1968 ) இடை நிறுத்தாமல் தொடர்ந்து நாடகம் நடத்திய சிறப்பும் பெருமையும் கொண்டது.
 3. பிரம்மாண்ட மேடையமைப்பு இன்றைய சினிமாவை விஞ்சும் அளவிலான தந்திர காட்சிகள், நாடக மேடைகளில் முப்பரிமாண காட்சிகளை காட்டிய ஒரே கம்பெனி இதுதான்.
 4. சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை தன்  நாடகம் மூலம் உலகறியச்  செய்தது.
 5. பாரதி மணிமண்டப நிதிக்காக கல்லிடைக்குறிச்சியில் நாடகம் நடத்தி அதன் வசூலை நன்கொடையாக வழங்கியது.
 6. தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல பழக்கம் இவைகளை பிரதானமாகக் கொண்ட ஒரு குருகுலமாக நடைபெற்ற ஒரே நாடக கம்பெனி

நவாப் T.S. ராஜமாணிக்கத்தின் “மதுரை தேவிபால வினோத சங்கீத சபா” வில் பயிற்சி பெற்று திரைத்துறையில் ஜொலித்தவர்கள்.

 • நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்“.
 • ‘கலைமாமணி’ T.K.கல்யாணம்.
 • ‘கலைமாமணி’ T.K.கோவிந்தன்
 • இயக்குநர் நாடக ஆசிரியர் S. D.சுந்தரம்
 • நடிகர் N.N.கண்ணப்பா
 • நடிகர் M. N. நம்பியார்
 • நாடக ஆசிரியர் சக்தி கிருஷ்ணசாமி
 • இயக்குநர்  K.S.கோபாலகிருஷ்ணன்
 • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (சேலம்-1) S. R. ஜெயராமன்
 • மலையாள நடிகர் T.K.பாலச்சந்திரன்
 •  T.K.நடராஜன்
 •  K.V.சீனிவாசன்
 • T.K.மாரியப்பா
 •  P.S.சிவானந்தம்
 • எழுத்தாளர் கௌதம நீலாம்பரன்
 • N.K.T.முத்து
 • கள்ளபார்ட் நடராஜன்
 • S.M.சுப்பையா
 • P.K.செல்லமுத்து
 • T.P.சாமிக்கண்ணு
 • T.P.சக்திவேலு
 • மருதப்பா
 • M.N.காசிநாதன்
 • சாமிநாதன்
 • சண்முகம்
 • வெள்ளச்சாமி மற்றும் பலர்

சபரிமலையில் அருள்புரியும் ஸ்ரீ அய்யப்பன் மூல விக்ரஹம் இதுதான் இவ்விக்ரஹத்தைச் செய்தது. நவாப் T.S.ராஜமாணிக்கமும், தமிழ்வேள் P.T.ராஜனும் ஆவர். ஸ்ரீ அய்யப்பன் நாடகம் நடத்தி சபரிமலை ஸ்ரீ அய்யப்பனையும் சபரிமலை புனித யாத்திரையையும் விரத முறையையும் உலகறிய செய்தவர் நாடகச் சக்ரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் ஆவார்.

குமரி மாவட்டம் கடுக்கரையில் நாடக ஆசிரியர் உடையார் பிள்ளையிடம் தம் நாடக வசூலைக் கொடுத்து சபரிமலை போன்றே  ஸ்ரீஅய்யப்பனுக்கு மலைகளுக்கிடையில் அஞ்சுகிரி அய்யப்பன் ஆலயம் அமைத்தவர்   நவாப் T.S.ராஜமாணிக்கம்.

“1938 கோவையில் மகாத்மா காந்தி கண்டுகளித்த நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் “நந்தனார்” நாடகம்.”

நாடகத்தை பார்த்துவிட்டு மகாத்மா காந்தி வழங்கிய பாராட்டு சான்றிதழ் “காந்தி” என்று தன் கைப்பட தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.

1938 ல் சென்னை ஒற்றவாடை தியேட்டரில் “ஏசுநாதர்” நாடகத்தைப் பார்த்துவிட்டு பாராட்டும், சென்னை  பிஷப்  ரெவ.டி .செல்லப்பாவும், டாக்டர்.பி.வி.செரியனும், கையில் மாலையுடன் பிலாத் மன்னர் வேடத்தில் நவாப் T.S.ராஜமாணிக்கம்.

எழுத்தாளர் மீ.பா.சோமுவுடன் நவாப் T.S.ராஜமாணிக்கம்

1964 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியிடம் தேசிய விருது பெறும் நவாப் T.S.ராஜமாணிக்கம்.

‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில் வரும் அரண்மனை மாடம், பிரம்மாண்ட தங்கத்தேர் கம்சன் வேடத்தில் நவாப் T.S.ராஜமாணிக்கம்.

தமிழகத்தில் தலைசிறந்த நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை, வீருசாமி பிள்ளை, குளிக்கரை பிச்சையப்பா, கக்காபி முதலானோர் சபரிமலையில் அய்யப்பனை பிரதிஷ்ட்டை செய்துவிட்டு திரும்பும் நவாப் T.S.ராஜமாணிக்கம் அவர்களை வரவேற்கும் காட்சி  1951 கும்பகோணத்தில் நடந்த இக்காட்சி யாருக்குமே கிடைக்காத ஒன்று.

‘சம்பூர்ண ராமாயணம்’  நாடகத்தில் ஆஞ்சநேயர் வேடத்தில் நவாப் T.S.ராஜமாணிக்கம்.

‘பக்த ராமதாஸ்’ நாடகத்தில் நவாப் தர்பார். வாத்தியம் ஒலிக்க அதிர்வேட்டு முழங்க பரிவாரங்கள் இருவர் இருவராக வந்து இருபுறம் வரிசையாய் நிற்க ,கடைசியாக கவரிவீச, சாமரம் போட, கம்பீரமாக வந்து தர்பாரில் நவாப் அமரும் காட்சி கண்கொள்ளாக்காட்சி நீண்ட நேரம் மக்கள் கரவொலி எழுப்புவார்கள்.

சக்திலீலா என்ற நாடகத்தில் மும்மூர்த்திகள் சிவன், விஷ்ணு, பிரம்மா, அமர்ந்திருக்கும் காட்சி.

குமாரவிஜயம் என்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு மேடை ஏறிப் பாராட்டுகிறார்கள். முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்ரமணியம், திருவாங்கூர் முன்னாள் தலைமை நீதிபதி திருப்புகழ் மணி டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், பித்துக்குளி முருகதாஸ், நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை.

இவர்தான் நவாப் ‘பக்த ராமதாஸ் நாடகத்தில் ராஜமாணிக்கம் அவர்கள் நவாப்பாக நடிப்பார். இது அவருக்கு பெரும்புகழைத் தந்தது. ‘நவாப்’ என்ற பட்டம் மைசூர் மகாராஜா ஜெய சாம்ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது. உருது மொழியில் பேசி நடிப்பார். அவருடைய உடைமைகளையும், சிம்மாசனத்தையும் பார்த்தவர்கள் மெய்மறந்துபோவார்கள். பல முஸ்லீம் தலைவர்களும் பெருமக்களும் கண்டுகளித்து பாராட்டு வழங்கி உள்ளனர்.

நவாப் T.S. ராஜமாணிக்கத்தின் “மதுரை  தேவிபால வினோத சங்கீத சபா”  கம்பெனி பிள்ளைகள் சாப்பிடும் காட்சி தினமும் மூன்று வேளையும் இதுபோல்தான் பந்தி நடக்கும்.

மிகப்பெரிய நாடகக் கம்பெனி என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல.இந்தப் படத்தைப் பார்த்தாலே புரியும் நாடக குருகுலம் என்பதும்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் சதிர் ஆட கே.சாரங்கபாணி நட்டுவாங்கம் செய்ய, நாராயணராவ் மிருதங்கம் வாசிக்க இப்படி ஒரு காட்சி நாடகத்தில் நவாப்பின் இளவயதில்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் தன் குருஸ்தானத்தில் வைத்திருந்து ஸ்ரீபரமானந்த சுவாமிகள் நவாப்பின் சகோதரர் T.S கோவிந்தராஜ், கலைமாமணி T.K. கல்யாணம், அவரது சகோதரர் T.K.கோவிந்தன்.

நாடகத்தைப் பார்த்து பாராட்டும் காட்சி A.P.நாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நவாப் T.S.ராஜமாணிக்கம், சிலம்புச்செல்வர் ம.பொ.சி. வாகீச கலாநிதி கி.வா.ஜ, கவிஞர் S.D.சுந்தரம் ஆகியோர்.

1947 ஆகஸ்ட் 15ம் தேதி, நம்நாடு சுதந்திரமடைகிறது. முதல் நாள் 14ம் தேதி, நடு இரவு 12.00மணிக்கு அதிகாரம் மாறும் நேரத்தில் நாடகத்தின் உருவில் ஒரு காட்சி பாரத அன்னை அடிமைவிலங்கோடு தலைவிரிக்கோலத்தோடு நிற்கிறாள். அன்னைக்கு எப்போது விடுதலை என்று ஏங்கி நிற்க சரியான நேரத்தில் திடீரென்று பாரத அன்னையின் விலங்கு அறுபடுகிறது. மங்கள வாத்தியங்கள் முழங்குகிறது. தலையில் கிரீடம், கையில் ராட்டினம், கொடி, சூலம் எல்லாம் வருகிறது.

அடிமையாகக் காட்சி அளித்த பாரத அன்னை இப்போது சுதந்திர மாதாவாக காட்சி அளிக்கிறார். தலைவர்கள் வந்து பணிய மக்கள் குதூகல கோஷம் போட இவையாவும் கணநேரத்தில் நடக்கும் காட்சிகளாகும். இதை பார்த்துவிட்டுதான் தூத்துக்குடி மக்கள் நவாப் T.S.ராஜமாணிக்கத்திற்கு “சுதந்திர நாடக மணி” எனும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்

திருவனந்தபுரத்து மேயரும் மேரிலேண்ட் ஸ்டுடியோ அதிபரும்இயக்குனருமான P.சுப்ரமணிய பிள்ளையுடன் நவாப் T.S.ராஜமாணிக்கம்.

டெல்லி வைஸ்ராய் வேவல் பிரபுவின் பிரதிநிதி திருவாங்கூர் வந்தபோது நாடகத்திற்கு விஜயம் செய்து கண்டு மகிழ்ந்தார்  அவரை  நவாப் T.S.ராஜமாணிக்கம் வரவேற்கும் காட்சி அருகில் சர்.சி.பி.ராமசாமி ஐயர்.

கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்த்த தேசியக்கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்கு கம்சன் வேடமேற்ற நவாப் T.S.ராஜமாணிக்கம் மாலை அணிவிக்கிறார்.

திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் மகாராஜா அவரது தம்பி, அவரது தாயார் மகாராணி பிரதம நீதிபதி T.M.கிருஷ்ணசாமி ஐயர், திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோர் நவாப்பின் ஸ்ரீஐயப்பன் நாடகம் பார்க்கிறார்கள்.

திருவாங்கூர் மகாராஜாவுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறார் நவாப் T.S.ராஜமாணிக்கம் அதை மகாராஜா பணிவோடு பெற்றுக்கொள்கிறார். இது உயர்ந்த கலை பக்தியின் தன்மையைக் காட்டுகிறது.

முதறிஞர் ராஜாஜி நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தும் புகைப்படம்.

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரும் நவாப் T.S. ராஜமாணிக்கமும்.

தனக்கு கிடைத்த அளவற்ற பரிசுப் பொருள்களுடன் நாடக சக்ரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம்.

முன்னாள் முதலமைச்சர் ஆ.பக்தவச்சலம் அவர்களும் ஆஞ்சநேயராக வேடமேற்றிருக்கும் நவாப் T.S..ராஜமாணிக்கமும்.

நவாப் T.S. ராஜமாணிக்கத்தை வாழ்த்தும் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

நவாப் ராஜமாணிக்கத்தின் சம்பூர்ண ராமாயணம் பார்த்துவிட்டு பாராட்டும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள்.

பட்சிராஜா ஸ்டுடியோ அதிபரும்,படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீராமுலு நாயுடு  நவாப்  T.S.ராஜமாணிக்கம் பாராட்டி பேசும் காட்சி (கம்சன் வேடத்தில் நவாப்  T.S.ராஜமாணிக்கம்).

இசைத்தென்றல் திருச்சி லோகநாதனும்  நவாப் T.S.ராஜமாணிக்கமும்.

நாடக மேடையைக் கலைக்கோயிலாகப் பேணிவளர்த்த பக்தர் நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை தான் வாங்கிய பதக்கங்களுடன்.

பம்பாய் நாடக விழாவுக்குச் செல்லும்போது செண்டிரல் ஸ்டேஷனில் எடுத்தப் படம் படத்தில் மாலையுடன் நவாப் T.S.ராஜமாணிக்கம், அவர் சகோதரர் T.S.கோவிந்தராஜன், ஸ்ரீஅவ்வை T.K.ஷண்முகமும், ஸ்ரீ சகஸ்ரநாமம் அவர்களும் மற்றும் பல சபை காரியதரிசிகளும்.

பம்பாய் தமிழ் சங்கத்தால் நடத்தப்பட்ட நாடக விழாவில் பம்பாய் கவர்னர் ஹரேகிருஷ்ண மேதாப், கம்சன் வேடத்தில் உள்ள நவாப் T.S. ராஜமாணிக்கத்தை பாராட்டி பேசும் புகைப்படம்.

பம்பாய் தியேட்டர் சென்ட்டிரல் அவர்கள் நவாப் T.S.ராஜமாணிக்கம் அவர்களை ஹோட்டல் அபோலோவில் விருந்து உபசாரமளிக்க வரவேற்கும் போது எடுத்த படம். அதிமிர்ஸ்பான், அய்யார் பீர்பாய், துர்க்கா கோட்டே நவாப் T.S.ராஜமாணிக்கம், அல்டேசர், ஸ்ரீமதி லோபோ A.K.வேதாந்தம்

திருவனந்தபுரத்தில் தசாவதார ரோலிங்கப் (தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனது). திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யரால் நவாப்  T.S. ராஜமாணிக்கத்திற்கு பரிசாக அளிக்கப்பட்டது.

பம்பாய் நாடக முன்னோடிகளில் ஒருவரும், திரைப்பட நடிகருமான ஸ்ரீ பிருத்விராஜ் கபூருடன் கம்சன் வேடத்தில் நவாப் T.S. ராஜமாணிக்கம் பம்பாய் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ தேபர், பெருந்தலைவர் காமராஜரும் நவாப் T.S ராஜமாணிக்கத்தை பாராட்டும் போது எடுத்த படம்.

‘குமார விஜயம்’ நாடகத்தை கண்டுகளித்துவிட்டு நவாப் T.S. ராஜமாணிக்கத்தை பாராட்டும் ரஷ்ய நாட்டு கலைஞர்கள்.

தமிழ்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும், நாடகத் தொண்டு செய்த பக்தி சிரோண்மணி நவாப் T.S.ராஜமாணிக்கமும்.

நவாப் T.S. ராஜமாணிக்கத்தின்  உயிர்த்தோழரான கலைமாமணி கே.சாரங்கபாணி  அவர்களுடன் நவாப்

நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் ‘ஏசுநாதர்’ நாடகத்தை 1938ல் வாடிக்கன் போப் ஆண்டவரின் செயலாளர் கண்டுகளித்து பாராட்டி அளித்த பாராட்டு மடல் இதுதான்.

நாடகக் கலையால் மகத்தான சாதனையைச் செய்துகாட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கதையை நாடகமாக நடத்தியதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல, உலகமறிய ஸ்ரீஐயப்பன் புகழ் பரவ காரணமாக இருந்தவர் நாடகச் சக்ரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம்